செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகளாகத் தென்படுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர், ஒரு தூசி நிறைந்த ஆற்றுப்படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, ‘சிறுத்தைத் தடம் மற்றும் ‘பாப்பி விதைகள்’ எனப் புனைப்பெயர்ச் சூட்டப்பட்டன.
இது பழங்கால செவ்வாய் கிரகத்தின் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்குக் கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என நாசா தெரிவித்திருக்கிறது.