இண்டி கூட்டணியை சேர்ந்தவர்கள் மக்களுக்கு இதுவரை எந்த விதமான நல்லதும் செய்யவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை அமைந்தகரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
இந்தியா கூட்டணியைச் சார்ந்தவர்கள் இதுவரை மக்களுக்கு எந்த விதமான நல்லதும் செய்யவில்லை என்றும் தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி அமைக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இண்டி கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூட்டணியைப் பலப்படுத்துவது மட்டும் முக்கியமல்ல, மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்,