ரஷ்யாவில் கேபிள் கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 35 பேர் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ரஷ்யாவின் மேற்கு காகசஸ் மலைகளில், ஜார்ஜியா எல்லையருகே உள்ள மவுண்ட் எல்ப்ரஸில், கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இந்தக் கேபிள் காரில் பயணித்துப் பனி படர்ந்த இயற்கை அழகினை ரசித்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், 35-க்கும் மேற்பட்டோர் ஒற்றை இருக்கைக் கேபிள் கார்களில் பயணித்தப்படி இயற்கையை ரசித்தனர்.
அப்போது ஒரு கேபிள் கார் ரோலரில் இருந்து சறுக்கியதால் விபத்துக்குள்ளானது. இதனால் அடுத்தடுத்து வந்த கேபிள் காரும் விபத்தில் சிக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்டோர்க் கேபிள் காரில் சிக்கியபடி உயிருக்கு
போராடிக் கொண்டிருந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், காயமடைந்தவர்களையும், உயிருக்குப் போராடியவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.