தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் சார்பில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகள் தங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான “பட்டம்” மற்றும் விஐடி கல்வி நிறுவனம் சேர்ந்து, பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டிகளை நடத்தின.
“பட்டம் செஸ் போட்டிகள் 2025” என்ற தலைப்பில் சென்னை விஐடி வளாகத்தில் நடைபெற்ற போட்டியை “பட்டம்” பதிப்பின் பொறுப்பு ஆசிரியர் வெங்கடேஷ், விஐடி சென்னையின் கூடுதல் பதிவாளர் பி.கே மனோகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பள்ளி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாகப் போட்டி நடத்தப்பட்டதாகத் தினமலர் மாணவர் பதிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செஸ் போட்டிகள் தங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.