விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வருவதாகவும், அதனை சீரமைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீரானது விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், ராமசாமிபுரம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை குடங்களில் பிடித்து சென்றனர். அப்போது குடிநீர் தரமற்று இருப்பதாகவும், குடிநீருடன் உப்புநீர் கலந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சரி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.