லண்டனில் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக டாமி ராபின்சன் என்பவர் தலைமையில் லண்டனில் unite the kingdom என்ற தலைப்பில் போராட்டம் நடைபெற்றது.
புலம்பெயர்ந்தோர் மற்றும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய லண்டன் வழியாக அவர்கள் பேரணியாகச் சென்றனர்.
இதனிடையே மறுபக்கம் இனவெறிக்கு எதிராக நில்லுங்கள் என்ற முழக்கத்துடன் புலம்பெயர்ந்தோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்பு குழுக்களையும் தனித்தனியாகப் பிரித்து போலீசார் பாதுகாப்பு அளித்தனர். அப்போது சிலர் பாதுகாப்பை மீறி புலம்பெயர்ந்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், போலீசார் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.