கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றஞ்சாட்டி உள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தோஹாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் தலைவர்கள், போரை முடிவுக்குக் கொண்டு வராமல் இழுத்தடிப்பதாகவும், பணயக்கைதிகளை விடுவிப்பதைத் தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் பயங்கரவாத தலைவர்கள் காசாவில் உள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை வெளியேற்றினால்தான் பணயக் கைதிகளை விடுவிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டு வரவும் முடியும் என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிவிட்டுள்ளார்.