கள்ளர் பள்ளி விடுதியை சமூக நீதி விடுதி எனப் பெயர் மாற்றம் செய்ததற்கு எதிராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது கள்ளர் பள்ளி விடுதியை சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்த அரசாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் அரசின் இந்த நடவடிக்கைப் பிரமலை கள்ளர்களின் வரலாற்றை மறைக்கும் செயல் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.