சென்னை விம்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எப். தொழிற்சாலையில் 2 வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
850க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் இந்தத் தொழிற்சாலையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள், நிர்வாகத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் நிறுவனத்தின் கதவு பூட்டப்பட்டு ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆலையின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.