ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த வனத்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம், பலமநேர் அருகே உள்ள சத்யநாராயண சாமி கோயிலின் அருகே ஒற்றைக் காட்டு யானை ஒன்று நடமாடியுள்ளது.
இதுகுறித்துத் தகவலறிந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். அப்போது அந்தக் காட்டு யானைத் தாக்கியதில் வனத்துறை அதிகாரி சுகுமார் என்பவர் படுகாயமடைந்தார்.
இதில் சுகுமாரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.