தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகளில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பிரபலமான ஜவுளிக் கடைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் போத்தீஸ் ஜவுளிக் கடை, மாநிலம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ளது.
வரி ஏய்ப்பு புகாரில் போத்தீஸ் ஜவுளிக் கடைகளில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையில் 3வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி. நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை உரிமையாளர்களில் ஒருவரான ரமேஷ் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், சென்னை நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் மகன் போத் ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் 3வது நாளாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.