இளம்பெண் ஒருவர் தனது கால்கள் மூலம் மேஜை போன்ற டேபிளை சக்கரம் போன்று சுழற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
சுமார் 25 வயதுமதிக்கதக்க இளம்பெண் ஒருவர், தரையில் படுத்தபடி சிவப்பு நிற மேஜையை தனது இரண்டு கால்களால் தாங்கி பிடித்தப்படி பலவித வடிவங்களில் சக்கரம் போன்று மேஜையை சுற்றி அசத்தினார்.
இளம்பெண் மேஜைக் கீழே விழாமல் கால்களால் சக்கரம் போன்று சுற்றும் வீடியோ வெளியான நிலையில், அதனை நெட்டிசன்கள் லைக் செய்து வருகின்றனர்.
மேலும், ஒரு சிலரோ இவரது கால்களில் சக்கரம் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
எது எப்படியோ மனதை ஒருங்கிணைத்து மேஜையை கீழே விழாமல் சக்கரம் போன்று சுழற்றிய பெண்ணை நாமும் பாராட்டலாம்.