நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் எனப் போட்டியாக பசுக்கள் களமிறங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இது வெளிநாட்டில் நடந்த நிகழ்வு என்பதை இந்த வீடியோ மூலம் அறிய முடிகிறது. பண்ணை வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், நாய், பசு, உள்ளிட்ட கால்நடைகளை செல்லமாக வளர்த்து பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உரிமையாளர் தனது காரில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனது எஜமான் வருவதை கண்ட வளர்ப்பு நாய் ஓடி வந்தது. அதற்குப் போட்டியாக இரண்டு பசுக்களும், உரிமையாளரின் காரை நோக்கி ஓடி வந்தது. அப்போது உரிமையாளர் காரில் இறங்கித் தனது வளர்ப்பு நாயையும், பசுக்களையும் நெற்றியில் வருடி கொடுத்துப் பாசத்தை வெளிப்படுத்தினார்.
நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் எனப் பசு மாடுகள், மனிதர்களுக்கு எடுத்துரைப்பது போன்று இந்தக் காட்சி அமைந்தது.