திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவரைப் போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் பழனிராஜன் என்பவர் குமரன் கிளினிக் என்ற பெயரில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவரது கிளினிக்கில் சிகிச்சைப் பெற்ற மாணவர் ஒருவர், சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
பின்னர் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு, மேல்சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் பழனிராஜனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் போலி சான்றிதழை வைத்து மருத்துவம் பார்த்து வந்ததை கண்டறிந்தனர். பின்னர் அவரை கைது செய்ததுடன், கிளினிக்கிற்கும் சீல் வைத்தனர்.