திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் முதலை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தனூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், முனீஸ் என்ற கல்லூரி மாணவர் முகம் கழுவுவதற்காக இறங்கியுள்ளார்.
அப்போது தண்ணீருக்குள் இருந்த முதலை முனீஸின் காலைக் கடித்து உள்ளே இழுத்துள்ளது. இதில் காலில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, இளைஞரின் உடலை கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அணைப் பகுதியில் முதலை நடமாட்டம் உள்ள இடத்தை ஆய்வு செய்து சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.