பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ் சென்னையில் நாளை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல், திமுக-வை எதிர்கொள்ள வியூகங்கள் வகுப்பது உள்ளிட்டவை குறித்து பாஜக சிந்தனை செயல் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இதற்காக பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வர உள்ளார். தொடர்ந்து அவர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.