ஆசிய கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!
Sep 17, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 11:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிய கோப்பை  கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

20 ஓவர் ஆசிய கோப்பை  கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 6வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது. தடுமாற்றத்துடன் விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், அக்சர்  படேல் மற்றும் பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனையடுத்துக் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்களை இழந்து 15.5 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 47 ரன்களும், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் தலா 31 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கிக்கொள்ளவில்லை. இதனையடுத்து No Handshake என்ற வார்த்தை ட்ரெண்டாகி வருகிறது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியை, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் துணை நிற்பதாக கூறினார்.

இந்திய அணி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, மும்பை, லக்னோ, பாட்னா, நாக்பூர், இந்தூர் என பல பகுதிகளிலும் கொண்டாட்டம் களைகட்டியது.

மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், இந்திய அணியை பாராட்டி முழக்கங்கள் எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags: cricket match126th Flower Exhibition in Utkai! - Intensive maintenance work!Asia Cup Cricket - India defeats Pakistan to win
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ் நாளை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Next Post

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies