மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
















