கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் வென்று சாதனை படைத்து, தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் அக்டோபர் 13 முதல் 18-ஆம் தேதி வரை கிக் பாக்ஸிங் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், 49 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், ஜூனியர் ஆண்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அகில் ரக்ஷித் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ரக்ஷத்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்றார்.
ஆண்கள் பொது பிரிவில் கிஷோர் ஒரு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பதக்கங்களுடன் சென்னை திரும்பிய வீரர்களுக்கு, இந்திய அணியின் மேலாளர் ஓம் பிரகாஷ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரர்கள், கிக்பாக்ஸிங் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
















