அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும் என்றும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றவே மனம் திறந்து பேசினேன் என்றும், தேர்தலில் வெற்றிப் பெற அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று செங்கோட்டையன் குறிப்பிட்டார்.