பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு - 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!
Aug 6, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் நடத்திய பிரமாண்ட பேரணியால் லண்டன் மாநகரமே அதிர்ந்து போனது. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக எதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடியேறிகளால் ஐரோப்பா முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது. அந்த வகையில், தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் நடைபெற்ற பேரணியால் லண்டன் மாநகரமே குலுங்கியது.

லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடைபெற்ற மாபெரும் பேரணியில், சுமார் ஒன்றரை லட்சம் பேர்க் கலந்து கொள்ளத் திரும்பும் திசையெல்லாம் மனிதத் தலைகளாக காணப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், தேசத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கமிட அசாதரண சூழல் காணப்பட்டது.

டாமி ராபின்சனின் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பாசிசத்துக்கு எதிரான பேரணி என்ற பெயரில் இனவெறிக்கு எதிரானவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க, அது போலீசாருக்குப் பெரும் தலைவலியாக மாறியது. எங்கள் நாட்டில் வந்து எங்களுக்கு எதிராகவே பேரணியா? என டாமி ராபின்சன் ஆதரவாளர்கள் கொந்தளிக்க நிலைமை கை மீறி போனது. ஒரு கட்டத்தில் டாமி ராபின்சன் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களை நெருங்கி விட, அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர்.

ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த வலதுசாரி ஆதரவாளர்கள் போலீசார் மீதே தாக்குதல் நடத்த கலவரம் வெடித்தது. டாமி ராபின்சன் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 26 பேர் காயமடைந்துவிட, அமைதிக்குக் குந்தகம் விளைவித்தாக 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே போராட்டக்காரர்களுடன் ஆன்லைனில் பேசிய எலான் மஸ்க், பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும், புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்துவிடும் என எலான் மஸ்க் எச்சரிக்க, விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

சமீப காலமாகவே, உலக நாடுகளில், ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி, ஆட்சி மாற்றம் ஆகியவைத் தொடர் கதையாகி உள்ளன. சமீபத்தில், GEN-Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் நேபாளத்தில் சர்மா ஒலி அரசாங்கம் கவிழ்ந்தது. அதே போன்றதொரு எழுச்சி போராட்டம் பிரிட்டனிலும் கிளம்பி இருக்க, பிரச்னையை அந்நாட்டு அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags: Anti-immigrant protests intensify in Britain - London rocked by rally attended by 15thousands people!லண்டன் மாநகரம்London
Share
Tweet
SendShare
Previous Post

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்கு பெரும் வரவேற்பு – செங்கோட்டையன்

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies