நேபாளத்தில் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
இதனால் அரசு அலுவலகங்கள், பிரதமர், அதிபர் இல்லங்கள், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட கட்டடங்களுக்குத் தீவைக்கப்பட்டன.
போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் காத்மாண்டுவில் உள்ள பவுத்தநாத் ஸ்தூபிக்கு வெளியே உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.