ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சுங்கச்சாவடியில் லாரியின் டயர் வெடித்ததில் சுங்கச்சாவடி அறையின் கண்ணாடி உடைந்ததால் ஊழியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தார்.
ஜெய்ப்பூரில் உள்ள ஹிங்கோனியா டோல் பிளாசாவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சம்பவத்தன்று சுங்கச்சாவடி எண் 6-ன் வழியாகச் சென்ற லாரியின் டயர் திடீரென பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது சுங்கச்சாவடி அறையின் கண்ணாடி உடைந்து ஊழியர் மீது விழுந்தது.
இதனால் அலறியடித்து அறையைவிட்டு ஊழியர் வெளியேறினார். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.