மாஸ்கோவில் புதிய தேசிய விண்வெளி மையத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மாஸ்கோ தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த விண்வெளி மையம் திறக்கப்பட்டது.
இவ்விழாவில் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மோஸ் டிமிட்ரி பகானோவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, புதிய விண்வெளி மையத்தைப் பார்வையிட்ட அதிபர் புதின், விஞ்ஞானிகளிடம் மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.