அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தலை துண்டித்து கொல்லப்பட்டதற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அரசியல் பிரமுகர் விவேக் ராமசாமி கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு அமெரிக்காவில் உள்ள அரசியல் பிரமுகரும், இந்திய வம்சாவளியினருமான விவேக் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சந்திரமௌலி நாகமல்லையா மனைவி மற்றும் மகன் கண்முன்னே கொடூரமாகத் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது என்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.