முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப் படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.
இதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அண்ணா சாலை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அண்ணாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.
இதேபோல் தனது சொற்களால் தமிழினத்தை கட்டிப்போட்ட மாபெரும் தலைவர் அண்ணா எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அண்ணாவின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.