பாமக நிறுவனர் ராமதாஸின் லட்சியங்களையும், நோக்கங்களையும் அன்புமணி தலைமையில் நிறைவேற்றுவோம் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞரான பாலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகச் சென்னை திநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்
பாமகவில் நிலவிவந்த குழப்பங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் வாயிலாகத் தீர்வு கிடைத்துள்ளது என்றும் மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ராமதாஸின் லட்சியங்களையும், நோக்கங்களையும் அன்புமணி தலைமையில் நிறைவேற்றுவோம் என்றும் பாமக-வின் நிறுவனர் ராமதாஸ் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று அவர் கூறினார்.
அன்புமணியைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே கட்சியின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் பாமகவில் இனி அன்புமணி தலைமையிலான அணி மட்டுமே உள்ளது என்று பாலு தெரிவித்தார்.