மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கனமழையால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்தோடியது.
கிழக்கு இம்பாலின் கனமழைக் காரணமாக ஷேத்ரிகாவோவில் ஐரில் நதி நிரம்பி விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்தது.
இதேபோல் வாங்ஜிங் நதியும் அபாய அளவைத் தாண்டியதால் தௌபல் மாவட்டத்தில் உள்ள வாங்ஜிங் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்தனர். தொடர்ந்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் குடியிருப்புவாசிகள் இடம்பெயர்ந்தனர்.
இதனிடையே மணிப்பூர் தீயணைப்பு சேவைகள் மீட்புக் குழு, வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை மீட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைத்துள்ளனர்.