உங்கள் ஸ்வெட்டர் மற்றும் சால்வைகளை சீக்கிரம் தயார் நிலையில் வைத்திருங்கள். ஏனெனில் எலும்பை உறைய வைக்கும் குளிர்காலம் வரப்போகிறது.
அமெரிக்கத் தேசிய வானிலை அமைப்பின் அறிக்கையின்படி, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு இடையே லா நினா உருவாக வாய்ப்புள்ளது.
இது அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரைத் தொடரவுள்ளது. லா நினா என்பது வழக்கமான வெப்பநிலையை விட சற்று குறைவாகப் பதிவாகும் என்பது பொருள்.
பசிபிக் பெருங்கடலில் அதன் தாக்கத்தைப் பொறுத்தே உலக நாடுகளின் வெப்பநிலையில் மாறுதல் ஏற்படும்.
அந்த வகையில் நடப்பாண்டின் இறுதியில் இந்தியாவில் கடுமையான குளிர் அலை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலைப் பதிவாகும் எனக் கூறப்படுகிறது.
வட இந்தியா மற்றும் இமயமலைப் பகுதியில் கடுமையான குளிர் அலைகள் மற்றும் அதிகப் பனிப்பொழிவு இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.