தென்காசியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம் மாறாந்தையில் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்காக அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்த நிலையில், அண்மையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கத் தமிழக வனத்துறைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணைப் பிறப்பித்துள்ளது.