அமெரிக்காவில் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட பூக்களை மிதித்து அவமதித்த இளைஞருக்கு அடி, உதை விழுந்தது.
வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொதுமக்கள் மலர்கள் மற்றும் பூங்கொத்துகளை வைத்து சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அப்போது இளைஞர் ஒருவர், மலர்களை மிதித்து அவமதித்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரைக் கீழே தள்ளி சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்துப் போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.