அமிர்தரஸில் வெளிநாட்டுப் பெண்ணிடம் செல்போன் எண் கேட்ட நபருடன் கணவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் வெளிநாட்டைச் சேர்ந்த கணவனும் மனைவியும் கடைவீதிக்குச் சென்றிருந்தனர்.
அப்போது இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் செல்போன் எண் தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், எப்படி அவரிடம் செல்போன் எண் கேட்கலாம். 2 விநாடிக்குள் ஒரு பெண்ணிடம் எண் கேட்பது விசித்திரமாக உள்ளது எனக் கூறி வாக்குவாதம் செய்தார்.
இறுதியில் அந்த நபர், வெளிநாட்டுப் பெண்ணை சகோதரி எனக் கூறிவிட்டு அங்கிருந்து நழுவினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.