ஸ்பெயினில் சைக்கிள் பந்தயத்தின்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஏராளமானோர் போராட்டம் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்குக் கண்டனம் தெரிவித்துப் பல்வேறு நாடுகளில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்பெயினில் சைக்கிள் பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பாலஸ்தீன ஆதரவாளர்கள் சைக்கிள் பந்தயச் சாலையின் குறுக்கே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்துப் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்ப்டடது.