இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு அணிகளும் மோதியதால் போட்டி குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டும் அடித்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா, 15.5 ஓவர்களில் 131 ரன்கள் குவித்து வெற்றி வாகைச் சூடியது.
இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.