இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாட்டுக் குடியேற்றத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ’Unite the Kingdom’ என்ற பெயரில் மிகப்பெரிய பேரணி நடந்துள்ளது. இங்கிலாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டதன் பின்னணி காரணம் என்ன? என்பது பற்றிய செய்தித்தொகுப்பைப் பார்க்கலாம்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, அகதிகளாக வந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 3.9 மில்லியன் ஆகும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 6.5 சதவீதப் பேர் முஸ்லிம்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் அதிகளவில் பிரிட்டனில் குடியேறி வருவதால், வேலைவாய்ப்பின்மை, அரசு சலுகைகள் கிடைக்காமல் போவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உள்ளூர் மக்கள் சந்திக்க நேர்கிறது. இதனால், இஸ்லாமிய குடியேற்றம், பிரிட்டனில் மிகப் பெரிய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
பிரிட்டனில் புலம்பெயர்ந்தோரைத் தங்க வைப்பதற்கான விடுதிகளும் அரசால் ஏற்படுத்த பட்டுள்ளன. 2020ம் ஆண்டு வரை இந்த விடுதிகளைப் பயன்படுத்தும் புலம்பெயர்ந்தோரின் என்ணிக்கைக் குறைவாகவே இருந்த வந்த நிலையில், கடந்த நான்காண்டுகளாக அந்த எண்ணிக்கைப் பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், புலம்பெயர்ந்தோர் விடுதிகளில் தங்குவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு, இதுவரையில் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து சுமார் 27000 பேர்ப் பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக வந்துள்ளனர். இது கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகும்.
கடந்த சனிக்கிழமை, (The English Defence League) இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக்கின் நிறுவனரும், தீவிர வலதுசாரி செயல்பாட்டாளருமான (Tommy Robinson) டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த மாபெரும் பேரணி நடந்தது.
கடந்த அக்டோபர் மாதமே இந்தப் பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தார். வழக்கு ஒன்றின் காரணமாக அவர் சிறையில் இருந்ததால் அப்போது ஒத்திவைக்கப்பட்ட பேரணி இப்போது நடந்துள்ளது.
தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடந்த பேரணியில், இங்கிலாந்தின் யூனியன் ஜாக் கொடியையும், சிவப்பு மற்றும் வெள்ளைச் செயிண்ட் ஜார்ஜ் சிலுவையையும் ஏந்திய படி லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பாலஸ்தீனக் கொடியை ஏந்திச்சென்ற போராட்டக்காரர்கள், அக்கொடியைப் பாதியாகக் கிழித்து எறிந்தனர். இங்கிலாந்து பிரதமர்க் கெய்ர் ஸ்டார்மரை விமர்சித்தும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. படகுகளை நிறுத்துங்கள், இஸ்லாமியரை அவர்கள் நாட்டுக்கு நாடு கடத்துங்கள், எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியிருக்கும் டாமி ராபின்சன் பேசும்போது, இது ஒரு கலாசாரப் புரட்சியின் தீப்பொறி என்றும், இதுவரை நாடு கண்டிராத தேசபக்தி ஒற்றுமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ மூலம், போராட்ட காரர்களிடம் பேசிய உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், வன்முறையைத் தேர்ந்தெடுத்தாலும் தேர்ந்தெடுக்காவிட்டாலும், வன்முறை உங்களைத் தேடி வரும் நிலையில், எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது இறந்துவிட வேண்டும் அதுதான் உண்மை என்று கூறியுள்ளார். மேலும், “பிரதமர்க் கெய்ர் ஸ்டார்மரின் அரசைக் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸின் வலதுசாரி அரசியல்வாதியான எரிக் ஜெம்மோர், தெற்கிலிருந்து வரும் மக்களாலும், முஸ்லிம் கலாச்சாரத்தாலும் பிரான்சும் இங்கிலாந்தும் ஒரே மாதிரியான பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ,நாட்டின் தேசிய அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, பாசிசத்துக்கு எதிரான பேரணி’ என்ற இஸ்லாமிய மதவெறி போராட்டமும் நடந்தது. சுமார் 5,000 பேர் பங்கேற்ற இந்தப் பேரணியைத் தடுத்த காவல்துறையினர் மீது பாட்டில்கள் வீசபட்டதில் 26-க்கும் மேற்பட்ட காவல் துறையினர்ப் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறைத் தொடர்பாக 25 பேர்க் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இக்கட்டான சூழலில் லண்டன் சிக்கி இருக்கும் போது, தனது மகனுடன் லண்டனின் எமிரேட்ஸ் மைதானத்தில், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்டுக்கு எதிரான ஆர்சனலின் பிரீமியர் லீக் போட்டியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் பிரதமர்க் கெயர் ஸ்டார்மர்.
வன்முறை, பயம் மற்றும் பிரிவினையின் அடையாளமாக நாட்டின் கொடியைப் பயன்படுத்துபவர்களிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என்று பிரதமர் கெயர் ஸ்டார்மர் கூறியுள்ள நிலையில், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்
மற்ற போராட்டங்களைப் போன்று லண்டன் பேரணி சாதாரணமான போராட்டமல்ல. பிரிட்டனின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கப்போகும் போராட்டம் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.