அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டியை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் கவுர்க் கடந்த 1992ம் ஆண்டு அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கமான சோதனையின் போது போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகள் ஹர்ஜித் கவுரைக் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து ஹர்ஜித் கவுரை விடுவிக்க வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் சீக்கிய குழுவினர் என 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஹர்ஜித் கவுர், அமலாக்க அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து வந்ததாகக் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.