தொடர் கனமழை காரணமாகப் பல்வேறு வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் கனமழைக் கொட்டித் தீர்த்தது. சாலைகள், மார்க்கெட் பகுதிகளில் குளம்போல் தண்ணீர்த் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மணிப்பூர் மாநிலம் தெளபாலில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நல்வாய்ப்பாகப் பாலத்தில் யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கங்கை நதியில் இருந்து தண்ணீர வெளியேறி குடியிருப்புகளை மூழ்கடித்தது.
இடுப்பளவிற்கு மேல் தண்ணீர் தேங்கிய நிலையில், பொதுமக்கள் கால்நடைகள் மற்றும் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர்.