மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் சாமானிய மக்கள் பெருமளவு பயனடைந்து வருவதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை அண்ணா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் சாமானிய மக்கள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகின்றனர் என்றும் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் வரி 28%-ல் இருந்து 18%-ஆக குறைந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
தொலைக்காட்சியின் வரிவிகிதம் 21%-ல் இருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மக்களுக்குத் தீபாவளி பரிசு அளிக்கும் விதமாக ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.