சீனாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாவலர்களை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவரை மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு வீரர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது அந்தப் பெண் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துத் திடீரென பாதுகாவலரை சரமாரியாக தாக்கினார்.
இதையடுத்து அங்கு வந்த மற்ற பாதுகாவலர்களையும் அந்தப் பெண் சரமாரியாகத் தாக்கினார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.