இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறியதாகக் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனமான MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அண்மையில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது.
இதில், அனுமதியின்றித் தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததால், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் இருந்து நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.