குடியரசுத் துணை தலைவர் மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்துக் கூறினார்.
டெல்லிச் சென்றுள்ள இபிஎஸ் அண்மையில் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு இபிஎஸ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.