ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த வெற்றியின் மூலம், அடுத்தாண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தனக்கான இடத்தை வைஷாலி உறுதி செய்திருப்பதாகப் பாராட்டி உள்ளார்.
அவரது இந்த வெற்றி, ஆயிரக்கணக்கான இந்திய இளம் தலைமுறையினரை செஸ் விளையாட்டை நோக்கி அழைத்து வரும் என்ற நம்பிக்கை அளிப்பதாகவும், வைஷாலி மேலும் பல உயரங்களைத் தொட எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டுமெனப் பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.