கனமழை காரணமாக சென்னை அசோக் நகர் பகுதியில் பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அதில் அசோக் நகர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 3 மரங்கள் அடுத்தடுத்து வேரோடு சாய்ந்தது.
இதனால் அப்பகுதி வழியாகச் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து அறிந்து வந்த தீயணப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.