கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் விசாரணைக்குச் சென்ற இடத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வெள்ளிமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவரை கரியலூர் காவல் நிலைய போலீசார்க் கைது செய்தனர்.
இதுதொடர்பாக விசாரணைக்குச் சென்ற தனிப்பிரிவு தலைமைக் காவலரான பிரபு என்பவர், கடை உரிமையாளரின் 17 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால் தலைமைக் காவலர் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர் தங்கியிருந்த குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட போலீசார், 7 நாட்டுத் துப்பாக்கி, கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.