இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களைத் தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனையடுத்து DREAM 11-உடனான உறவை முறித்துக் கொள்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்தது.
வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளாது எனத் தெரிவிக்கப்பட, ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது
மேலும் போட்டி ஒன்றுக்கு நான்கரைக் கோடி ரூபாய் வீதம் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.