இந்திய பிரதமராக அதிக நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள பிரதமர் மோடியின் பயணங்களால், வெளிநாட்டு உறவுகள் மேன்மை அடைந்துள்ளன. உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தவே பிரதமர் மோடி பல்வேறு உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார். செல்லும் நாடுகளில் எல்லாம், அங்குள்ள இந்திய வம்சாவளியினர், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடி மீது காட்டும் அதீத அன்பும் ஆதரவும் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2014-ம் ஆண்டில் முதன் முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாகப் பூடான் நாட்டுக்குச் சென்றார். அதே ஆண்டிலேயே சீனா, மங்கோலியா மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.
2018-ம் ஆண்டு வரை மட்டும் 42 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 84 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அப்போது தொடங்கிய அயல்நாட்டுப் பயணங்கள் இன்னும் வேகமாகத் தொடர்கிறது. உலகம் முழுவதும் இந்திய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கைச் சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட், அடோப் போன்ற சர்வதேச முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே தலைமை நிர்வாக அதிகாரிகளாக தலைமைத் தாங்குகின்றனர்.
2014-ல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பிரதமர் மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்களை இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்தார். பிரதமர் மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்நாட்டு இந்தியா வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
குறிப்பாக, குவாட் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் 13,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘மோடி அண்ட் யுஎஸ்’ என ஒரு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. முன்னதாக, பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்றனர். பலரும் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பிரதமர் தங்கியிருந்த இடத்திலும் ஏராளமானோர் மோடி மோடி என்று உற்சாகக் கோஷமிட்டபடி நின்றனர். பிரதமர் மோடி டெலாவேரில் தங்கியிருக்கும் போது தங்கவிருக்கும் ஹோட்டலிலும் நூற்றுக்கணக்கானோர்க் கூடியிருந்தனர். பிரதமரை வரவேற்கும் விதமாகப் பல்வேறு கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் கலாச்சார நிகழ்ச்சியும் நடந்தது.
முன்னதாக வாஷிங்டனில் பிரதமரின் வருகையைக் கொண்டாட இந்திய அமெரிக்கப் புலம்பெயர்ந்தோர் ஒற்றுமைப் பேரணியை நடத்தினர். மேலும் ‘தோலிடா’ என்ற நாட்டுப்புற பாடலைப் பாடி உற்சாகமாகப் பிரதமர் மோடியை அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்றனர்.
புரூனே நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமையை பெற்ற பிரதமர் மோடியை, அந்நாட்டில் வாழ் இந்திய வம்சாவழியினர் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரேசிலுக்கு பிரதமர் மோடி வந்தடைந்தபோது, இந்திய வம்சாவழியினர்ப் பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களைபி பாடி அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
குறிப்பாக, ‘யே தேஷ் நி மித்னே துங்கா’ என்ற ஆபரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட நடன நிகழ்ச்சி அரங்கில் எதிரொலித்தது. இந்தியாவின் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக விழுமியங்களை வெளிப்படுத்தும் ஒரு பிரேசிலிய இசைக் குழுவும் பக்தி இசையை நிகழ்த்தியது.
56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமரான பிரதமர் மோடியை அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினர் ‘மோடி மோடி’ என்று உரக்கக் குரல் எழுப்பியும், மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் தனது முதல் முதல் வெளிநாட்டுப் பயணமாக சைப்ரஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமான மற்றும் மனமார்ந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது போன்ற அன்பு, பாசம் மற்றும் மரியாதை வேறு எந்த இந்திய பிரதமருக்கும் இதுவரைக் கிடைக்கவில்லை! பிரதமரைப் பார்த்ததும், மகிழ்ச்சியாகும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மோடி மோடி மோடி என்று கோஷமிடுவது, அவரது தலைமைக்குக் கிடைத்த வலுவான ஆதரவைக் காட்டுகிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சீனா சென்ற பிரதமர் மோடிக்குச் சீனா வாழ் இந்தியர்களால் FANFARE உடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.
‘பாரத் மாதா கீ ஜெய்’ & ‘வந்தே மாதரம்’ என்று கோஷம் சீனா வானத்தில் எதிரொலித்தது. தியான்ஜெனில் உள்ள ஓட்டலில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை வெளிப்படுத்திய சீன நாட்டு கலைஞர்களைக் கண்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்தார். மேலும், ஏராளமான சீன வாழ் இந்திய மக்கள் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியா பற்றிய உலகின் பார்வையை மாற்றியமைத்த பிரதமர் மோடியின் ஆட்சி, உள்நாட்டில் இந்தியர்களையும் வெளிநாட்டில் இந்திய வம்சாவளியினரையும் தாம்ஒரு இந்தியன் என்று பெருமைப்பட வைத்திருக்கிறது.
மக்களின் இதயம் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணக்கமாகத் துடிக்கும்போது, உன்னதமான தருணங்கள் உருவாக்கப்படும். அது தான், எந்த நாட்டுக்குச் சென்றாலும் பிரதமரை வரவேற்கும் இந்திய வம்சாவழியினர் தன்னை அறியாமல் கண்ணீர் பெருக அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.