இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகர் சித்தார்த், இப்போது சர்வதேச மேடையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறார்.
ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பைஅடிப்படையாகக் கொண்டு உருவாகும் நெட்ஃப்ளிக்ஸின் குளோபல் சீரிஸான”Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தச் சீரிஸில் சித்தார்த், அமித் முகர்ஜி என்ற கதாபாத்திரத்தில் பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார். அவருடன் நடிகை ஃப்ரீடா பின்டோ பாருல் சௌத்ரி திருமணமான பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுக்குள் மீண்டும் காதல் மலர, இந்திய அமெரிக்கச் சமூகத்தை அதிரச் செய்யும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சித்தார்த்தின் சமீபத்திய “சித்தா” மற்றும் “3BHK” போன்ற படங்கள் உணர்ச்சிபூர்வமான கதைக்காகப் பாராட்டைப் பெற்றன. தற்போது சித்தார்த் உலகளாவிய ரசிகர்களையும் கவரப் போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை..