புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை படைத்துள்ளது.
நவீனக் காலத்திற்கு ஏற்ப புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இப்படி புதுமையான கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் நாடுகளை தரவரிசைப் படுத்தும் பணிகளை உலகப் புதுமை கண்டுபிடிப்பு குறியீட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், சுவிட்சர்லாந்து வழக்கம் போல் முதலிடத்தில் நீடிக்கிறது.
சுவீடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் பட்டியலில் இடம்பிடிக்க, சீனா முதன் முறையாகப் பத்து இடத்திற்குள் நுழைந்துள்ளது.
கடந்த ஆண்டு 10-வது இடம் பிடித்த ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி, சீனா அந்த இடத்தை கைப்பற்றியுள்ளது.
தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன், பின்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளும் முதல் பத்து ரேங்கில் இடம்பிடித்துள்ளன.