திருப்பூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
திருப்பூர் மாநகரில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
திருப்பூர் ராயபுரம், பாளையக்காடு, ஷெரிஃப் காலனி, தென்னம்பாளையம், கருவம்பாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாகப் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் மழை நீர், கழிவு நீருடன் கலந்து சாலையில் ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
ஒரு மணி நேர மழைக்குக் கூட சாலைகளில் செல்ல முடியாத அளவிற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.