தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டத்தில் நிகழ்ந்த ஆட்டோ விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வனபர்த்தி மாவட்டம், நசனல்லி அருகே ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையின் எதிர்புறம் சென்று கவிழ்ந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணி என இரண்டு பேர் உடல்நசுங்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.